ETV Bharat / international

'இம்ரான் கான் ஒரு குற்றவாளி' தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பும் நவாஸ் ஷெரீப்! - : Nawaz Sharif questions Election Commission's negligence in PTI

இஸ்லாமாபாத்: பி.டி.ஐ வெளிநாட்டு நிதி வழக்கில் அமெரிக்க முகவர்கள் மீதான குற்றச்சாட்டை மாற்றியமைத்த இம்ரான் கான் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமபாத்
இஸ்லாமபாத்
author img

By

Published : Jan 17, 2021, 10:32 AM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது கட்சி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிதி பரிமாற்ற வழக்கில் தொடர்புடை அமெரிக்க முகவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை மாற்றியமைத்ததாக கூறப்படுகிறது. இதைச் செய்த இம்ரான் கான் ஒரு குற்றவாளி என்றும், ஆதாரங்கள் தெளிவாக இருந்தும் அவர் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேள்வி ஏழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "இவ்வழக்கு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த இம்ரான் கான் பல தந்திரங்களை பயன்படுத்தினார். மார்ச் 2018 இல், தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்து, ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகியும், இன்னும் எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை. இதுகுறித்து ஜனவரி 19ஆம் தேதி, 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) தலைநகரில் உள்ள ஈ.சி.பி அலுவலகம் முன் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

2014 நவம்பரில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) மீதான வெளிநாட்டு நிதி வழக்கு, கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அக்பர் எஸ் பாபர் என்பவரால் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.