சீனாவின் ஆளுமை பகுதிகளில் ஒன்று ஹாங்காங். இங்குள்ள நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி, ஆறு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது துணைத் தலைவராக இருக்கும் ஹாங்காங் தன்னாட்சிக்கு ஆதரவு உறுப்பினர் டென்னிஸ் குவோக்தான் இதற்குக் காரணம் என்று சீனா குற்றஞ்சாட்டியது.
அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற துணைத் தலைவர் பதவியிலிருந்து டென்னிஸ் குவோக் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் சீனாவுக்கு ஆதரவான சான் கின்-போர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
திங்கள்கிழமை நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் சீனாவுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட அட்டைகளை நாடாளுமன்றத்தில் காண்பித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் சான் கின்-போர் ஹாங்காங் தன்னாட்சிக்கு ஆதரவான பல உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் சீனாவுக்கு ஆதரவான ஸ்டாரி லீ, இத்தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் சீனாவுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்கள் விரைவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனா தேசிய கீதத்தைக் களங்கப்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாட்டில் இரு வேறு அமைப்புகள் உள்ளன என்பது விரைவில் முடிவுக்கு வரும் என்று தன்னாட்சிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
முன்னதாக மே 8ஆம் தேதியும் நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஹாங்காங் தன்னாட்சிக்கு ஆதரவான பல்வேறு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறினர். இதைப் பயன்படுத்தி சீனாவுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்கள் ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் சமீப காலங்களாக தன்னாட்சிக்கு ஆதரவான போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது.
இதையும் படிங்க: சீனாவின் கைப்பாவையாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு - ட்ரம்ப்