ETV Bharat / international

பத்திரிகை ஒரு புரட்சிகர ஆயுதம் - புரட்சியாளர் ஹோ சி மின் - ஹோ சி மின் தத்துவங்கள்

வியட்நாம் விடுதலை போராளி ஹோ சி மினுடைய 51ஆவது நினைவு தினமான இன்று, பத்திரிகை துறை பற்றிய அவரது சிந்தனைகள் குறித்து இத்தொகுப்பு விவரிக்கிறது.

Ho Chi Minh
Ho Chi Minh
author img

By

Published : Sep 2, 2020, 6:49 AM IST

வியட்நாம் விடுதலையின் வேராக இருந்த ஹோ சி மினுக்கு 50 ஆண்டுகால பத்திரிகை துறை அனுபவம் உண்டு. வியட்நாம் புரட்சிகர பத்திரிகையை தொடங்கிய ஹோ சி மின், வியட்நாமில் புரட்சி பத்திரிகையாளர்கள் பலர் உருவாக காரணமாக இருந்தார்.

லீ பரியா, தன் நியென் (இளைஞன்) உள்ளிட்ட பத்திரிகை, வியட்நாம் டாக் லாப் (சுதந்திர வியட்நாம்) உள்ளிட்ட இதழ்களில் முக்கிய பங்களிப்பை செலுத்திய ஹோ சி மின், 53 புனைப்பெயர்களில் 2,000 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசிய ஹோ சி மின், பத்திரிகையில் எழுதுவது பற்றி என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் எழுதும்பொழுது முதலில் என்னையே கேள்வி எழுப்பிக்கொள்வேன். யாருக்காக நான் எழுதுகிறேன்? எதற்காக எழுதுகிறேன்? மக்களுக்கு புரியும் வகையில் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதுவது எப்படி? என சிந்திப்பேன். எழுதி முடித்தபின்பு அதை என்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் கொடுத்து எனக்காக சரிபார்க்கச் செய்வேன் என்கிறார்.

இதுகுறித்து இன்னும் விரிவாக:

எதைப் பற்றி எழுதுவது?

நாம் மக்கள் நலனுக்காக, தோழர்களுக்காக எழுத வேண்டும். நம் குறைபாடுகள் குறித்து நாமே விமர்சனத்தை முன்வைக்க வேண்டும்.

யாருக்காக எழுதுவது?

வயது, மதம், கட்சி என எந்தப் பாகுபாடுமின்றி உழைப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் நம் வாழ்க்கை நெடுக நம்மோடு பயணிக்கும் மக்களுக்கு எழுத வேண்டும்.

எதற்காக எழுத வேண்டும்?

மக்களோடு தொடர்பில் இருக்க, அவர்களை தெளிவுறச் செய்ய, கிளர்ந்தெழச் செய்ய நாம் எழுத வேண்டும்.

எப்படி எழுத வேண்டும்?

மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் எழுதுவதை சுருக்கமாக, தெளிவாக எழுத வேண்டும் என்கிறார்.

பத்திரிகையாளர்கள் குறித்து பேசுகையில், பத்திரிகையாளர்கள் புரட்சிகர கலகக்காரர்கள். பேனாவும் பேப்பரும் அவர்களின் ஆயுதங்கள் என குறிப்பிடுகிறார்.

Ho Chi Minh - journalism
Ho Chi Minh - journalism

பத்திரிகையாளர்கள் அரசியல் படிக்க வேண்டும், சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மக்களோடு பேசும்போது நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், மக்கள் உண்மையை மதிக்கக்கூடியவர்கள். எனவே உண்மையைச் சொல்லும்போதுதான் மக்கள் நம்மை கவனிக்கத் தொடங்குவார்கள். போர் சூழல் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் நாடுகளை நாம் நம்பக்கூடாது என்கிறார்.

பத்திரிகை துறை என்பது மக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது. நண்பர்கள், எதிரிகள் என இரு தரப்பினருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும். எனவே நம் எழுத்தில் கவனம் தேவை என ஹோ சி மின் குறிப்பிடுகிறார். வியட்நாம் விடுதலைப் போராளி என உலகம் முழுவதும் அறியப்படும் புரட்சிகர பத்திரிகையாளர் ஹோ சி மினின் 51ஆவது நினைவு தினம் இன்று.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.