பாகிஸ்தானின் லாகூரின் சுற்றுப்புறத்திலுள்ள முஹமது அலி சாலையில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அலி-ஓ-முர்தாசா என்ற இடத்தில் மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேச தல்ஹா சயீத் காத்திருந்தபோதுதான் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேஸ் சிலிண்டர் தவறுதலாக வெடித்து நிகழ்ந்த விபத்தாகவே இதை பாகிஸ்தான் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த தல்ஹா சயீத், அருகிலிக்கும் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தல்ஹா சயீத் தந்தையான ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு!