ETV Bharat / international

இந்திய தேசியவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன கட்டுரை!

டெல்லி: லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்திய தேசியவாதிகளை எச்சரித்து சீன அரசு பத்திரிகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.

chian india dispute
chian india dispute
author img

By

Published : Jun 23, 2020, 6:22 AM IST

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு இருந்துவருகிறது. இதன் காரணமாக, இருதரப்பு ராணுவத்தினரும் அங்கு குவிந்துள்ளனர்.

இந்த மோதலுக்குச் சுமுக தீர்வுகாணும் நோக்கில் உயர்மட்ட அளவில் தொடர் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினரும் திடீரென பயங்கர கைகலப்பில் ஈடுபட்டனர்.

சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில், 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய தேசியவாதிகளை எச்சரித்து 'குளோபல் டைம்ஸ்' என்ற சீன அரசு நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

'China-India border paramount' என்ற தலைப்பில் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஹு ஜின்ஜிங் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், "இந்திய தேசியவாதிகளுக்கு நான் எச்சரிப்பது இதுதான்: ஆயுதம் இல்லாத மோதலிலேயே உங்கள் வீரர்களைச் சீனப் படையினர் வீழ்த்தும்போது, நாங்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தால் என்னவாகும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந்திய பாதுகாப்புப் படையைவிட மிக மிகச் சக்திவாய்ந்த சீனப் படை.

சீண்டல்கள் மூலம் எல்லைப் பிரச்னையை இந்தியா மோசமடையச் செய்தால், பாறை மீது முட்டை மோதி உடைவதுபோல இந்தியப் படையினர் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்' என்றழைக்கப்படும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பணியில் உள்ள கமாண்டர்கள், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் துப்பாக்கி கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்த விதிமுறைகளில் திருத்தம்செய்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முழு சுதந்திரம் வழங்கியது.

கல்வான் மோதலைத் தொடர்ந்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் குளோபல் டைம்ஸ் நாளிதழில் இந்தக் கட்டுரையானது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஜான் போல்டனின் புத்தகம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.