ஹைதராபாத்: உலகில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 37 லட்சத்து 61 ஆயிரத்து 726 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்து 13 லட்சத்து 09 ஆயிரத்து 623 ஆக உள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்து 130-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக நாடுகளில் கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 66 ஆயிரத்து 546 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 998 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம், அமெரிக்க வகை விலங்கான மின்க் மற்றும் மனிதர்களிடையே கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. விலங்குகளிடையே கரோனா வைரஸ் பரவுவதால் வைரசில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு எச்சரித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து சர்வதேச சுற்றுலாப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.