உலகெங்கிலும் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 043 ஆகும். இறப்பு விகிதம் 12 லட்சத்து 20 ஆயிரத்து 535 ஆகும்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் 8.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் கரோனாவிற்கான சோதனை குறையவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 83 லட்சத்து 13 ஆயிரத்து 876-க்கும் அதிகமானோர். ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 650-க்கும் அதிகமானோர் இறந்துள்ள நிலையில் உலகளவில் இந்தியா கரோனா பாதிப்பு, இறப்பு விகிதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கரோனா பாதிப்பினால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா இருக்கிறது.
இந்தத் தீநுண்மி உலகப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்கு உள்படுத்தியுள்ளது, ஏராளமான மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. உலக மக்கள் பலரின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது.