உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக இந்தியாவும் அடுத்தப்படியாக பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்து 368 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 287 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள அமெரிக்காவில், இதுவரை 85 லட்சத்து 20 ஆயிரத்து 307 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 149 உயிரிழந்தனர். அங்கு, நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்து 51 ஆயிரத்து 180ஐ கடந்துள்ளது. கரோனா பாதிப்பால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 914ஆக உள்ளது.
அரசின் முழு முடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகளை அளித்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தற்போது நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால், கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால், வர்த்தகர்களும், பொதுமக்களும் கண்டாயம் தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிதல், கையை சுத்தம் செய்வதைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 76 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு