உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறிவருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலகளவில் 3 கோடியே 67 லட்சத்து 61 ஆயிரத்து 333 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 956ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 177 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் 70 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.