ETV Bharat / international

உலகளவில் 3 கோடியே 41 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Oct 1, 2020, 1:51 PM IST

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 631ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல திணறிவருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 3 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 631 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 18 ஆயிரத்து 871ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரத்து 12ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக இந்தியாவில்தான் 86 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.