ETV Bharat / international

உலக அளவில் 37 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

author img

By

Published : Jun 11, 2020, 1:51 PM IST

உலக அளவில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

corona
corona

உலக நாடுகளை மிரட்டும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன.

corona
உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை

இதுவரை உலக அளவில் 74 லட்சத்து 46 ஆயிரத்து 117 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 137ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 25 ஆயிரத்து 659ஆக உயர்ந்துள்ளது.

corona

நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கரோனாவால் மோசமடைந்துவரும் உலகம்: வருந்தும் உலக சுகாதார அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.