கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினந்தோறும் கொத்து கொத்தாக மக்களின் உயிரை பறித்து கொண்டிருக்கும் கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உலக நாடுகள் திணறுகின்றன.
இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும், மூன்றரை லட்சம் மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
குறிப்பாக கரோனா பலி எண்ணிக்கை அமெரிக்காவில் 12 ஆயிரத்தையும், இத்தாலி நாட்டில் 17 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் உலகளவில் 7,378 பேர் உயிரிழந்தது கவலையளிப்பதாக இருக்கிறது.
இதையும் படிங்க: 14 மாதக் குழந்தையின் உயிரை பறித்த கரோனா வைரஸ்!