ஐக்கிய நாடுகளின் 42ஆவது மனித உரிமைகள் அமைப்பு ஜெனிவாவில் கூடியது. இதில் கில்கித் - பால்டிஸ்தான் பகுதியைச் சேர்ந்த சமூக அர்வலரான செங் ஹெச் செரிங் பேசுகையில், கில்கித் - பால்டிஸ்தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது என்பதை ஐக்கிய நாடுகளின் சபை உணர வேண்டும்.
தொடர்ந்து, கில்கித் - பால்டிஸ்தான் மக்களோடு இஸ்லாமாபாத் உடன் இருப்பது போல் நடிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களை தனது சொந்த நலனுக்காக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.