ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, பயங்கரவாத அச்சுறுத்தல், எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 18ஆம் தேதி இத்தேர்தலின் முடிவுகள் வெளியாயின.
இதில், அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி கட்சி 50.64 விழுக்காடு வாக்குளைப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அஷ்ரஃப் கனி வரும் 27ஆம் தேதி இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
இதையும் படிங்க : சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,592ஆக உயர்வு