ETV Bharat / international

ஆஸ்திரேலியா : தீயணைப்பு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்கர்கள் பலி

author img

By

Published : Jan 23, 2020, 7:37 PM IST

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.

australia firefighters die in plane crash, ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் மரணம்
australia firefighters die in plane crash

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாகக் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. இதனை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர்.

இந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஸ்னோவி மொனாரே வனப்பகுதியில் பிடித்துள்ள காட்டுத் தீயை அணைக்க அம்மாகாண தீயணைப்புத் துறை, விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த விமானம் வானத்தில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் மூன்று தீயணைப்பு வீரர்கள் பலியானதாகவும், அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் கிளாடிஸ் பெரிஜிக்லியன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கௌல்சன் ஏவியேஷன், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 'சி-130 லாக்ஹீட்' ரக விமானம் ஒன்று நியூ சவுத் வேல்ஸில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளனதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

விபத்து குறித்து நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத் துறை ஆணையர் ஷேன் ஃபிட்ஸிமோன்ஸ் கூறுகையில், "சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளான விமானத்தைக் கண்டறிந்துள்ளோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அதில் சென்றவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க : வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.