இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு அப்துல் காதிர் கான் எழுதியுள்ள கடிதத்தில், "அணுசக்தித் துறையின் வியூக திட்டப் பிரிவு அலுவலர்கள் என்னை சிறைபிடித்துள்ளனர். ஆனால், இதுவரை என்னை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தவில்லை. என் வழக்கறிஞரிடம் கூட பேச அவர்கள், அனுமதி மறுக்கின்றனர்.
ஆகையால், பயண உரிமை உட்பட, என் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
84 வயதான அப்துல் காதிர் கானின் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக, இதுகுறித்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான உபகரணங்களை வடகொரியா, லிபியா ஆகிய நாடுகளுக்குத் தான் விநியோகம் செய்ததாக 2004ஆம் ஆண்டு காதிர் கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் உஷார்!