கான்பெரா: ஆஸ்திரேலியாவில் சமூக வலைதள ஊடகங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் செய்திகளை வெளியிட செய்தி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்குத் தொகையை அளிக்க வேண்டும் என ஒரு சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டது.
அரசின் சட்டத் திருத்தத்திற்கு பேஸ்புக் நிறுவனம் இணங்க மறுக்கவே, அந்நாட்டு அரசு பேஸ்புக் செயலியிலிருந்து செய்தி உள்ளடக்கத்தை அந்நாட்டு மக்கள் பார்க்கவும், பகிரவும் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை காரணமாக ஏராளமான ஆஸ்திரேலிய மக்கள் தங்கள் நாடுகளின் செய்திகளைக் காண முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், பேஸ்புக் நிறுவத்திற்கும் அரசின் இந்த நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த முற்பட்டுள்ளது. அதில் விரைவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை திரும்பப் பெறப்படும். இதற்காக ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் பல மாற்றங்களுக்கும், உத்தரவாதங்களுக்கும் ஒப்புக் கொண்டதில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். இது எங்கள் நிறுவனத்திற்கு வழங்கும் அங்கீகரிப்பாக கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளது.