மக்காசர்: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் குருத்தோலை ஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் ஒன்பது பேர் காயமுற்றனர்.
முன்னதாக, தேவாலயத்தின் பாதுகாப்பு காவலர்கள் தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் உடலில் கட்டியிருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். இதில், காவலர்களால் இருவர் நுழைவு வாயில் அருகே இறந்தனர்.
மேலும், நான்கு காவலர்கள் உள்பட 9 பேர் காயமுற்றனர்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். உலகின் அதிக இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது.
இங்கு கடந்த 2002இல் ரிசார்ட் தீவான பாலி மீது குண்டுவெடிப்பில் இருந்து 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள், பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.