தாய்லாந்தின் பழமைவாய்ந்த நகரான ஆயுட்தயவில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக உடையணிவிக்கப்பட்டு யானைகள், அங்கிருந்த உள்ளூர் பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அப்போது மாணவர்கள் யானைகளைக் கண்டு உற்சாகமடைந்தனர்.
சிவப்பு, வெள்ளை உடைகளை அணிந்த பல்வேறு வயதுடைய நான்கு யானைகள் கிறிஸ்துமஸ் உடையணிந்திருந்த மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தன.
இந்த யானைகள் அருகிலுள்ள ராயல் யானை கிராலிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இவை மனிதர்களுடன் தொடர்புகொள்ளவது குறித்து பயிற்சி பெற்றவையாகும்.
கடந்த 15 ஆண்டுகளாக, யானைகள் இதுபோன்ற உள்ளூர் பள்ளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வாகவே இது மாறிவிட்டது.
தாய்லாந்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், சில ஆண்டுகளாக அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் அளித்த கோலி