யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நேபாளத்தில் யானைகள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், அந்த ஆண்டிற்கான (16ஆவது) யானைகள் திருவிழா அந்நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக யானைகள் அழகுப் போட்டியும் ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில், அழகாக அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகள் கலந்துகொண்டன. இந்த யானைகளின் உடல், நடை, நகம், நடை அழகு, ஒழுக்கம் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட நடுவர் குழு பரிசீலித்தது.
போட்டியில் பங்கேற்ற ஜிரி சௌதிரி என்ற யானைப் பாகன் கூறுகையில், "ஆறிலிருந்து ஏழு மாதங்கள்வரை யானைகளுக்கு பயிற்சியளிப்போம். இந்தப் பயிற்சிக்குப் பின்னரே போட்டியில் கலந்துகொள்ள யானைகள் அனுமதிக்கப்படுகின்றன. யானையை அலங்கரிக்க பெயிண்ட் உள்ளிட்டவற்றை நாங்கள்தான் கொண்டுவர வேண்டும்" என்றார்.
போட்டியில் வெற்றிபெற்ற யானைக்கு கரும்பு, வாழைப் பழம், பப்பாளி என வகைவகையான பழங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவின் மூலம் நேபாள சுற்றுலாத் துறையின் 'விசிட் நேபாள் 2020' விளம்பரம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : காஷ்மீர் விவகாரம்: பாக்., கோரிக்கையை ஏற்றது சவுதி அரேபியா!