மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ-வை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் தொல்பொருள் ஆய்வு, பாரம்பரிய மருத்துவத்தில் கூட்டு முன்னேற்றம் உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்கள் குறித்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காஷ்மீர் பிரச்னையில் தலையிட முடியாது என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.