இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘பாகிஸ்தானில் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை 250 பேர் பலியாகியுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
பலியான 250 நபர்களில் 35 பேர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 750 நோயாளிகள் இந்த நகரங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலினால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் தற்போது ஒரே சமயத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேகமாக பரவிவரும் மர்மக் காய்ச்சல்: 35 பேர் பாதிப்பு