கொழும்பு (இலங்கை): இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் ஆறு மாவட்டங்களில் ஜூன் 3ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அங்கு வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் ஆகியவை வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. இந்த வெள்ளத்தால், பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 45 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் தலைவர் மாஜ் ஜென், 'வெள்ளத்திலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 72 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’நான் யார் தெரியுமா...’ - போக்குவரத்துக் காவலர்களிடம் சவடால் விட்ட பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!