ETV Bharat / international

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - துருக்கி நிலநடுக்கம்

அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.

Turkey earthquake
Turkey earthquake
author img

By

Published : Nov 1, 2020, 3:16 PM IST

கிரேக்க தீவான சமோஸுக்கும் துருக்கிய கடற்கரைக்கும் இடையே அமைந்துள்ள ஏஜியன் கடலில் வெள்ளிக்கிழமை (அக்.30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதுவரை இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. இடிந்துவிழுந்த கட்டடங்களின் இடுபாடுகளில் சிக்கி 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு துருக்கியின் நகரமான இஸ்மிருக்கு தெற்கே உள்ள செஃபெரிஹிசர் மாவட்டத்தில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டிலி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 709 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் துருக்கிய மருத்துவ சங்கத்தின் இஸ்மீர் கிளையின் பொதுச்செயலாளரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். துருக்கிய கடற்கரையைத் தாக்கிய சுனாமியால், அந்நாட்டின் பிரதான துறைமுக நகரமான வாத்தியில் கடல் நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், கடற்கரையிலிருந்தும், சேதமடைந்த கட்டடங்களிலிருந்தும் மக்கள் விலகி இருக்குமாறு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய 70 வயது முதியவர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.