பாகிஸ்தான் பிரதமராக கெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி தலைவருமான, முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் பிரதமராக கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்ற கொண்டார். உலக வரலாற்றில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரதமராக பதவியேற்ற பெருமையை இம்ரான்கான் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவையில் சில மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக கைபர் பக்துன்வா மாகாணத்தில நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், " வெற்றியை நோக்கி கிரிக்கெட் அணி பயணிக்க வேண்டும் என்றால், சில வீரர்களுக்கு ஒய்வு வழங்கி விட்டு புதிய வீரர்களை களத்தில் இறக்க வேண்டும். அப்போது, தான் வெற்றியை தக்கவைக்க முடியும் " என தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பாக கொண்டு வந்துள்ள மாற்றத்தின் படி, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஃபாவத் சவுத்ரிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்த சர்வார் கானுக்கு விமானத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமரின் அமைச்சரவை மாற்றத்தை விரும்பாத அசாத் உமர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகைய சூழலில் இம்ரான்கான் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.