வட கொரிய தேசம் குட்டி தேசம்தான் என்றாலும் உலகளவில் புகழ்பெற்ற தேசமாக தெரியக் காரணம் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் யுன். அமெரிக்காவுடனே நேரடியாக மோதுவது, அணு ஆயுதங்களை தயாரித்து தள்ளுவது, தனக்கு ஆகாதவர்கள் நாட்டில் குரல் கொடுத்தால் அவர்களை உண்டு இல்லை என செய்வது இப்படி தனது அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் வட கொரிய அதிபர்.
இவரது தாத்தாவான கிம் சுங் தான் வட கொரிய நாட்டை தோற்றுவித்தவர். அந்நாட்டின் பிதமாகனாக கருதப்படும் அவரது 108ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் அந்நாட்டின் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால் கரோனா நோய் தொற்று காரணமாக அதிதீவிர கட்டுப்பாட்டில் உள்ள வட கொரியாவில் இம்முறை வழக்கத்திற்கு மாறாக நிறுவனரின் பிறந்தநாள் களையிழந்த நிலையில் கொண்டாடப்பட்டது.
எப்போதும்போல் பேரணி, ராணுவ அணிவகுப்பு என்ற ஆரவாரம் இல்லாமல் இந்த முறை அதிபர் கிம் கூட பங்கேற்காமல் எளிமையாக நடைபெற்றது. அரசின் முன்னணி அலுவலர்கள் மட்டும் பங்கேற்று நிறுவனரின் நினைவகத்தில் மரியாதை செலுத்தினர்.
வட கொரிய நாட்டில் தற்போதுவரை ஒரு கரோனா பாதிப்புகூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: அவலநிலையில் ஜிம்பாப்வே எய்ட்ஸ் நோயாளிகள்