ETV Bharat / international

ரிலையன்ஸிடமிருந்து ரூ.7000 கோடி பெறும் முனைப்பில் சீன வங்கிகள்! - China Development Bank

டெல்லி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் தீர்வுத் திட்டத்திலிருந்து 30 விழுக்காடு அல்லது 7,000 கோடி ரூபாய் பெற சீன வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

Chinese Bank
Chinese Bank
author img

By

Published : Aug 22, 2020, 3:25 AM IST

சீன வளர்ச்சி வங்கி, சீன எக்ஸிம் வங்கி, சீன கமர்ஷியல் வங்கி (ஐசிபிசி) ஆகியவை தீர்மானத்திட்டத்தின்படி, ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 30 விழுக்காடு அல்லது ரூ.7,000 கோடி பங்கைபெறலாம். ஆனால், பங்கைப்பெறும் உத்தேச திட்டம் தொடர்ந்தால் தொலைத்தொடர்புத் துறைகளிடமிருந்து எதுவும் பெறமுடியாது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறுபுறம், சீன வங்கிகள் சுமார் ரூ.7,000 கோடி (30 விழுக்காடு) கணிசமான பங்குடன் விலகிச் செல்லலாம், அதே நேரத்தில் பிற வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு ரூ.2,300 கோடி (10 விழுக்காடு பங்கு) மற்றும் எஸ்பிஐ மற்றும் இந்திய வங்கிகள் தற்போதைய திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொகைகளிலிருந்து ரூ.13,000 கோடி கிடைக்கும்.

திவால் சட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், துணை நிறுவனமான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தீர்வுத் திட்டத்திற்கு தொலைத்தொடர்புத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த வார தொடக்கத்தில், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) மும்பை அமர்விடம் தொலைதொடர்புத் துறை, கடன் வழங்குவோரால் ஒப்புதல் வழங்கப்பட்ட இந்தத் தீர்மானம், அரசுக்கு செலுத்தவேண்டிய சட்டப்பூர்வமான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகையை கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.