இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட180-க்கும் அதிகமான நாடுகளில் பெரும் பேரிடரை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள மீன் சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது சீன ஆய்வாளர் நடத்திய புதிய ஆய்வில், இந்த வாதத்துக்கு முற்றிலும் முரணான முடிவை எட்டியுள்ளனர். கரோனா வைரஸ் வூஹானில மட்டுமின்றி, சீனாவில் வெவ்வேறு இடங்களில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்பதே அவர்கள் வாதம்!
இதுதொடர்பாக பீப்பிள்ஸ் செய்தித்தாளில் வெளியான கட்டுரையில், "புது வகை கரோனா வைரஸை சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வூஹான் மீன் சந்தையுடன் தொடர்புடைய நோயாளிகளிடம் காணப்பட்ட கரோனாவிலிருந்து இது முற்றிலுமாக வேறுபடுகிறது.
ஜனவரி 20 முதல் பிப்ரவரி 25ஆம் தேதி இடையிலான காலகட்டத்தில் 326 நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளைச் சோதனையிட்டதில், வெவ்வேறு மரபணுக்களைக் கொண்ட இரண்டு கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன.
இதில் ஒரு வகை வூஹான் சந்தைக்குத் தொடர்புடையது என்றும், இன்னொன்று ஷாங்காங் உள்ளிட்ட வேறு இடங்களுக்குத் தொடர்புடையது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதனை வைத்துப் பார்க்கும்போது கரோனா வைரஸ் வூஹான் மட்டுமின்றி, சீனாவின் வெவ்வேறு இடங்களில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கரோனா வைரஸ் தோன்றிய வரலாறு குறித்து, சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இதையும் படிங்க :நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்