உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு அதன் பிறப்பிடமான சீனாவில் தற்போது அடங்கியுள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் தற்போது சீனா மெதுவாகக் களமிறங்கி உள்ளது.
இந்நிலையில், நடப்பு காலாண்டில் சீனாவின் பொருளாதார நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2020 முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டைக் காட்டிலும் 6.8 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. 1976ஆம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரும் பொருளாதாரச் சரிவைச் சீனா சந்தித்துள்ளது இந்த புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், இதுவரை சீனாவின் நவீன பொருளாதார வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 ஆயிரத்து 650 பில்லியன் யுவானாக சரிவைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சீனாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு!