விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோயான 'கொரோனா வைரஸ்' சீனாவில் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டின் உஹான் நகரில் உருவான இந்த வைரஸால் இதுவரை 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிகிச்சைப் பலனின்றி 41 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா, சார்ஸ் நோய் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த தொற்று நோய் பரவுவதைத் தடுக்க உஹான் நகர மக்கள் வெளியூர்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உஹான் நகரத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள், படகுகள், ரயில்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், விமான சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் ஏற்படும், எதிர்ப்பு சக்கி குறைவாக உள்ள முதியவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலோ, மூச்சுக் குழாயில் பாதிப்போ ஏற்படலாம். இந்த நோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவும் கொரோனா வைரஸ்!