சமீபத்தில் சீனா தலைநகர் பெய்ஜிங்கில், சீனா கொண்டு வந்துள்ள புதிய பட்டுப் பாதை சாலை தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட 37 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகள் வளர்ச்சியடையும் என்று கூறினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிர்த்து அனைவரும் போராட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது, கம்போடியா பிரதமர் ஹூன் சென் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், கம்போடியாவுக்கு சீனா உதவி செய்யும் என் அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாக கம்போடியா பிரதமர் ஹுன் சென் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் உள்ளிட்டவையை சுட்டிகாட்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வர்த்தக தடை விதிக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. இதற்கு கம்போடியா வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை அப்போது பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா எவ்வகையான உதவியை மேற்கொள்ளும் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.