சீனாவின் வூஹான் நகரில் தோன்றி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சீனாவில் புதிதாக 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 2,870ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 824ஆகவும் அதிகரித்துள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், பாதிப்பு கணிசமாகக் குறைந்ததுள்ளதையே இந்தப் புள்ளி விபரம் காட்டுகிறது. இதனிடையே, சீனா மட்டுமின்றி தென் கொரியா, ஈரான், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க : சிக்கன் உண்டு கொரோனா பீதியைத் துடைத்தெறிந்த தெலங்கானா அமைச்சர்கள்!