விண்வெளி ஆராய்ச்சிச்துறையில் சீனா தற்போது புதிய மைல் கல்லை தொட்டுள்ளது. அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கியது.
அதன் ரோவர் செவ்வாய் கிரத்தின் தரைப்பரப்பில் வெற்றிகரமாக தடம் பதித்து, சுற்றத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் நெருப்பின் கடவுளாகக் கருதப்படும் "சூரோங்" என்ற பெயர் கொண்ட இந்த ரோவர் 90 நாள்கள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதன் மூலம் அமெரிக்காவை அடுத்து செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தடம்பதித்த நாடாக சீனா சாதனை புரிந்துள்ளது. அடுத்ததாக நிலவில் மனிதனை தரையிறங்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஜப்பானில் அவசர நிலை அமலில் இருந்தாலும், ஒலிம்பிக்கை நடத்துவோம்"