பிஜிங்: ஆர்பிட் சுற்றுவட்டாரப் பாதையில் ஈர்ப்பு விசைகளை கண்டறிவதற்காக சீனா இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இரண்டு செயற்கைகோள்களும் சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்- 11 எனும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
ஜி.இ.சி.ஏ.எம் (GECAM-Gravitational Wave High-energy Electromagnetic Counterpart All-sky Monitor ) செயற்கைகோள்கள், காமா கதிர் வெடிப்புகள், வேகமான ரேடியோ வெடிப்புகளின் உயர் ஆற்றல் கதிர்வீச்சு உள்ளிட்ட வான நிகழ்வுகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ளது. ஜி.இ.சி.ஏ.எம் திட்டம் சீன அறிவியல் அகாடமியால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பெயினில் 2022 வரை கரோனா தடுப்பூசி - பரிசோதனை மீதான வாட் வரி நீக்கம்!