ETV Bharat / international

2 நாள்களில் 4 செயற்கைக்கோள்களைப் பறக்கவிட்ட சீனா! - நாசா

பெய்ஜிங்: சீனா கடந்த இரண்டு நாள்களில் நான்கு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை புரிந்துள்ளது.

china
china
author img

By

Published : Jun 7, 2020, 7:43 PM IST

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த மே 30ஆம் தேதியன்று தனது டெமோ-2 ராக்கெட்டை சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செலுத்தியது. அதே சமயத்தில் சீனா இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளிக்குச் செலுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் அதிகாலை 4 மணியளவில் லாங் மார்ச்-11 ராக்கெட்டில், புதிய தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் செலுத்தப்பட்டு 36 மணி நேரத்திற்குள், ஜியுவான் சேட்டிலைட் ஏவுதள மையத்திலிருந்து மார்ச்-2 டி ராக்கெட் மூலம் மேலும் இரண்டு செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன்மூலம், சீனா கடந்த இரண்டே நாள்களில் நான்கு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி புதிய சாதனை படைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.