ETV Bharat / international

பூமிக்கு திரும்பும் சீனாவின் ஆள் இல்லா சாங்கி-5 விண்கலம் - China aerospace

நிலவின் கற்கள், மணல் மாதிரிகளை ஏந்தியவாறு சீனாவின் சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது.

சீனாவின் சாங்கி விண்கலம்
சீனாவின் சாங்கி விண்கலம்
author img

By

Published : Dec 14, 2020, 8:26 PM IST

பெய்ஜிங்: நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது.

இதுதொடர்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பூமியை நோக்கி புறப்பட்டுள்ள விண்கலத்தின் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் கற்களை கொண்டு வந்து அதனை ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இதன் ஆய்வு கலம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் ஓசன் ஆப் ஸ்டோர்ம்ஸ் எனும் பகுதியில் தரையிறங்கியது.

இரண்டு கிலோ கிராம் எடையுள்ள நிலவின் கற்கள், பாறைகள் மாதிரிகளை எடுத்துக்கொண்டு நிலவை சுற்றி வந்துகொண்டிருந்த சாங்கி விண்கலம் வெற்றிகரமாக பூமியை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விண்கலத்தின் நான்கு இன்ஜின்கள் 22 விநாடிகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் 16ஆம் தேதி வட சீனாவின் உள் மங்கோலியாவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் நிலவின் மாதிரிகளை சோதனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் விண்வெளி திட்டம் இதுவாகும்.

இதையும் படிங்க: சந்திரனில் இருந்து பொருள்களை மீண்டும் கொண்டுவருவதில் இறுதிக்கட்டத்தில் சீனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.