தெற்கு ஆப்கானிஸ்தானில் இன்று( ஜூன் 4) காந்தஹார் மாகாணம் வழியாக சென்ற பேருந்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் இறந்துள்ளதாக, அம்மாகாண செய்தித்தொடர்பாளர் பஷீர் அகமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது," குண்டுவெடிப்பு சம்பவத்தில் பேருந்தில் இருந்த ஐந்து பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான்கள் தங்களது போர்களை இஃப்தார் பண்டிகைக்காக நிறுத்தி வைத்திருந்தனர். இருப்பினும், கடந்த மாதம் முடிந்த நிலையில், இதுபோன்ற குண்டு வெடிப்பு மூன்றாவது முறையாக நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ரமலான் விடுமுறைக்கு பின்னர் ஆப்கானிய படைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்" என்றார்.
நேற்று ( ஜூன் 2) இரவு, காபூலில் ஒரு மசூதிக்குள் வெடிகுண்டு வெடித்து, மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் எட்டு பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.