மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய நாடுகளான துருக்கி-சௌதி அரேபியாவுக்கு இடையே தற்போது கடும் பூசல் நிலவிவருகிறது. இந்த பூசல் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் காட்டமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விதமாக வளைகுடா நாடுகள் செயல்பட்டுவருகின்றன எனவும், துருக்கி புறக்கணித்து தனித்துவிட அந்நாடுகள் முயற்சிக்கின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டில் செய்தியாளர் ஜமால் கஷோகி என்பவர் துருக்கியில் உள்ள சௌதி அரேபியா தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அப்போதிலிருந்து இரு நாட்டு உறவுகளும் மோசமடையத் தொடங்கின. அண்மையில் வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரகம், பஹரைன் ஆகிய நாடுகள் இஸ்ரேல் உடன் இணக்கமான ராஜரீக உறவை தொடங்கியுள்ளன.
இஸ்லாமிய நாடுகளின் எதிரி நாடாக இஸ்ரேல் கருதப்பட்டுவந்த நிலையில் வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் கைகுலுக்கத் தொடங்கியுள்ளதற்கு துருக்கி எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.
இதையும் படிங்க: 2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது