பாகிஸ்தானின் மேற்கு பகுதியிலுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே நேற்று திடீரென்று சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள குவெட்டா பிரஸ் கிளப்பில் நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்பில் குறைந்த பட்சம் ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் இந்தக் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்துவந்த பாதுகாப்புப் படையினர், குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், காயமடைந்துள்ள 19 பேரில் சிலரது உடல்நிலை மிக மோசமாகவுள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: கொரோனா பாதிப்பு - 2,000 ஐபோன்களை இலவசமாக வழங்கிய ஜப்பான் அரசு