இந்தியாவின் அண்டை நாடான பூடானில் புது வகை கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக பூடானில் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”உள்ளூரில் புதிய வகை கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று (டிச.23) முதல் அடுத்த ஏழு நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் இடையூறுகள் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு முன்னெச்சரிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.