ETV Bharat / international

ஆஸ்திரேலிய பிரதமரின் தீபாவளி வாழ்த்து! - Scott Morrison diwali wish

ஆஸ்திரேலிய பிரதமர் தீபாவளி வாழ்த்துகளை தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் மோரிசன்
author img

By

Published : Oct 25, 2019, 5:36 PM IST

இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது ட்விட்டர் பக்கதில் தீபவாளிக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், "தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வணக்கம். தீபாவளி எவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்த பண்டிகை! ஒருவரோடு ஒருவர் மதிப்பையும் நம்பிக்கையும் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதால் எனக்குத் தீபாவளி மிகவும் பிடிக்கும்" என்றார். பல தரப்பட்ட பின்னணி, கலாசாரம், நம்பிக்கை கொண்ட மக்கள், நல்லிணக்கத்தோடு வாழும் இடம் ஆஸ்திரேலியாதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒளியின் திருநாளான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.