பெக் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் கஜகஸ்தானிலுள்ள அல்மாட்டி விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, அருகிலிருந்த இரண்டு மாடி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 100 பேரை ஏற்றிச் சென்ற இந்த விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
காவல் துறையினர், மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் காத்துக் கொண்டிருப்பது, பயணிகள் அடுத்த விமானத்தைப் பதிவு செய்வதற்காக காத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டின் தலைநகரான நூர் சுல்தானுக்கு செல்லவிருந்த விமானம்தான் விபத்தில் சிக்கியுள்ளது. Fokker-100 ரகத்தின் நடுத்தர அளவிலான இந்த விமானத்தை உற்பத்தி செய்த நிறுவனம் 1996ஆம் ஆண்டே திவாலானது. அடுத்த ஆண்டே Fokker-100 விமான ரகத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பெக் ஏர் நிறுவனத்தின் விமான சேவையும் Fokker-100 விமான ரகத்தின் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பழங்குடியாக மாறி நடனமாடிய ராகுல் காந்தி!