ETV Bharat / international

ஜுலம் நதியில் அணை கட்டுமானம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் - சீனாவைக் கண்டித்து போராட்டம்

நீலம், ஜுலம் நதிகளில் சட்டவிரோதமாக அணை கட்டப்படுவதைக் கண்டித்து சீனாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

anti-china-protests-held-in-pok-against-illegal-construction-of-dams

author img

By

Published : Jul 7, 2020, 1:13 PM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் நீலம், ஜுலம் ஆகிய நதிகளில் நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சட்டவிரோதமாக அணை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அப்பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டால் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அப்பகுதி மக்கள் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் #SaveRiversSaveAJK என்ற ஹேஷ்டாக் மூலம் நதிகளைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

சீனா, பாக். ஆகிய நாடுகளைக் கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

இந்தப் போராட்டம் பற்றி பொதுமக்கள் பேசுகையில், ''பாகிஸ்தான்-சீனா இடையே எந்தச் சட்டத்தின் கீழ் நதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் ஐநா கவுன்சில் சட்டத்தை மீறியுள்ளனர். அணை கட்டுமானப் பணிகள் கைவிடப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும்'' என்றனர்.

சில நாள்களுக்கு முன்பு கோஹலாவில் ஆயிரத்து 124 மெகாவாட் நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பாகிஸ்தான்-சீனா இடையே 2.4 பில்லியன் டாலர் செலவில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படிங்க: ட்ரம்ப்பை விமர்சிக்கும் மற்றொரு புத்தகம்: அடுத்த வாரமே வெளியிட திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.