ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுச் செல்லப்பட்டார்.
நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஜெர்மன் மருத்துவமனை, அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளித்துவந்தது. இந்நிலையில், 32 நாட்கள் சிகிச்சைக்குப் பின் நவல்னி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நவல்னியின் உடல் நிலை சீரான முன்னேற்றம் கண்டுள்ளதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும், அவர் பூரண குணமடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி, அந்நாட்டு அரசு நிர்வாகங்களில் உள்ள ஊழல் தொடர்பாக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இது வெட்கக்கேடானது' எதை சொல்கிறார் ட்ரம்ப்?