ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு எல்லையில் இருக்கும் மாகாணம் ஃபாராஹ். ஈரான் நாட்டின் அருகில் அமைந்துள்ளது.
இந்த மாகாணத்தின் அன்நார் தாரா மாவட்டத்தில் இன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், ஆறு சாமானிய மக்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்ததாக, அந்த மாகாணத்தின் காவல் துறை செய்தித்தொடர்பாளர் மொஹிபுல்லா மொஹிப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக, ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் வெடித்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.