காபூல் : ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, “ஆப்கானிஸ்தான் மக்களின் அன்புக்குரியவன் நானே, நானே ஆப்கானிஸ்தானை பாதுகாக்கும் அதிபர் என செவ்வாய்க்கிழமை (ஆக.17) ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பெயரில் வெளியாகியுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டின் அதிபர் தற்போது இங்கு இல்லாததால் நானே அதிபர் ஆகிறேன். நான் தற்போது நாட்டுக்குள் இருக்கிறேன். மக்களை பாதுகாக்கும் அதிபர் நானே. இது தொடர்பாக அனைத்து தலைவர்களிடமும் அவர்களின் கருத்தையும், ஆதரவையும் பெற அணுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை அடக்கி ஒடுக்கிய ராணுவத்தை கட்டமைத்த மசூத்தின் நெருங்கிய உதவியாளர்தான் அம்ருல்லா சலே. பின்னாள்களில் இவர் ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக உயர்ந்தார்.
-
Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021
இவருக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி வெளியேறிய நிலையில், அம்ருல்லா சலே குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
அம்ருல்லா சலே தாலிபன்களின் எதிரியாக கருதப்படுகிறார். இவர் தாலிபன்கள் கையில் கிடைக்கும்பட்சத்தில் அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறக் கூடும்.
ஆகையால் இவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என தகவல்கள் கூறின. இந்நிலையில் தாம் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த ட்வீட்டின் நம்பகத்தன்மை தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : ஆப்கன் விவகாரம்- பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை