ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டாக தலிபான் மற்றும் அரசுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தலிபான் அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய அந்நாட்டு அரசு தலிபான் சிறைக் கைதிகள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுவித்தது.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிய தலிபான் அந்நாட்டின் நான்கில் மூன்று பங்கு பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.
காந்தஹார் பிராந்தியத்தின் ஆர்கான்பாத் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் 11 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் நடைபெற்ற மோதல், அமைதி ஒப்பந்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்; துடைத்தெறியப்பட்ட பாஜக