சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுனானில் உள்ள யங்பியி நகரில் நேற்று அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றிரவு 9 மணி முதல் 11 மணி வரையில், 5 ரிக்டர் அளவில், நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகபட்சமாக குயிங்காய் மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தொடர் நிலநடுக்கத்தால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.