நியூசிலாந்தில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
ஆக்லாந்து : நியூசிலாந்தில் இன்று (மார்ச். 6) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தில் இந்த வார தொடக்கத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான, நில அதிர்வைத் தொடர்ந்து இன்று (மார்ச். 6) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 181 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 9 கிலோமீட்டர் (5 மைல்களுக்கு மேல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு தீவின் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் சுனாமி அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க : பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு!