மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டவாவோ டெல் சுர் மாகாணத்தில் இன்று (பிப். 7) மதியம் சுமார் 12.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிலிப்பைன்ஸ் நில அதிர்வு மற்றும் எரிமலை நிறுவனமான பிவோல்க்ஸ், "உள்ளூர் நேரப்படி மதியம் 12:22 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15 கிலோமீட்டர் ஆழத்தில், மாக்சேசே நகரிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. டெக்டோனிக் தோற்றம் கொண்ட இந்த நிலநடுக்கம் பின்விளைவுகளையும் பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த நிலநடுக்கம் கொரோனாடல் நகரம் மற்றும் மிண்டானாவோ பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. பசுபிக் அருகில் அமைந்துள்ளதால், பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகளை சந்தித்து வருகிறது" எனத் தெரிவித்தது.